veeramani-thumb

Rainwater Harvester Veeramani

வீரமணி – விவசாயி, புதுக்கோட்டை 

“எங்க பாட்டன் காலத்துல இந்தக் கிணற்றைக் கட்டியிருக்காங்க. 15 வருஷத்துக்கு முன்னால, இந்தக் கிணறு வீட்டுக்குப் பிரச்னையா இருக்குன்னு சொல்லி, கிணற்றை மூடிட்டாரு அப்பா. சில வருஷத்துக்கு முன்னால, 500 அடி போர்வெல் போட்டோம். அதிலயும் தண்ணீர் கிடைக்கலை. அப்போதான், தூர்ந்துகிடந்த கிணற்றைச் சரிசெய்யலாம்னு திட்டமிட்டேன்.

கிணற்றைத் தூர்வார ஒரே ஆளா களத்துல இறங்கிட்டேன். மொதல்ல கூலிக்குக்கூட ஆட்கள் யாரும் வரலை. 3 மாசம் வரைக்கும் தனி ஆளாத்தான் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செஞ்சேன். அப்புறம் மனைவி உறவுக்காரங்கனு சிலர் உதவிக்கு வந்தாங்க. ஒருவழியா கிணற்றைத் தூர்வாரி, முழுசா சரி பண்ணிட்டோம். பிறகு, வீட்டின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் வீட்டின் மேற்கூரையில் இருந்து விழும் தண்ணீர் வெளியே செல்லாதபடி, இரும்புத்தகரங்களைப் பக்கவாட்டில் அமைத்து, குழாய்கள்மூலம் மழைநீரைக் கிணற்றுக்குள் கொண்டு சென்று சேகரித்தேன். வீட்டின் மேற்கூரையில் விழும் ஒரு துளி மழைநீர்கூட வீணாகாது. மழைநீர் கிணற்றுக்குள் செல்வதற்கு முன்பு 3 வகையான ஃபில்ட்டர்கள் மூலம் தூசுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு, சுத்தமான நீர் மட்டும் கிணற்றுக்குள் செல்லும்” என்றார் மகிழ்ச்சியுடன்.

 

Source: Vikatan