is-rain-water-harvesting-important-thumb

மழை நீர் சேமிப்பால் கிடைக்கும் லாபங்கள்!

திரும்புகின்ற இடங்களில் எல்லாம் மழை நீர் சேமிப்பைப் பற்றியே பேச்சாக உள்ளது. இதை ஏன் இத்தனை பேர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்? அரசும் கூட மழை நீர் சேமிப்பை தொடர்ந்து வலியுறுத்துகின்றதே? இப்படி உங்கள் மனதில் கேள்விகள் எழுகின்றதா? ஆம் என்றால், இதை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

01). நம் குடிநீரின் முக்கிய ஆதாரமே மழை நீர்தான்
02). மழை நீர் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது
03). முறையாக மழை நீரை சேமித்தால், ஒரு வருடத்திற்கு  தேவையான  மழை நீரை சேமிக்கலாம்
04). மழை நீரை சுலபமாக பயன்படுத்தலாம்
05). நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும்
06). மண் அரிப்பு பெருமளவு குறையும்
07). ஒரு வருடத்தில் சுமார் 1550 ரூபாய் வரை சேமிக்கலாம்
08). அனைவரும் மழை நீரை சேமித்தால் வெள்ளம் குறையும்
09). ஒரு முறை மழை நீர் சேமிப்பிற்கு செலவு செய்தால், நெடு நாள் லாபம் கிடைக்கும்
10). மழை நீரின் மென்மையால், சிறிதளவு நீரே செலவாகும்
11). 200 சதுர அடியில் கூட ஒரு வருடம் முழுவதும் தேவையான நீரை சேமிக்கலாம்
12). நமக்கு தேவையான நீர் எப்பொழுதும் நம் வசம் இருக்கும்

 

மழை நீரை ஏன் சேமிக்க வேண்டுமென்று புரிந்து கொண்டீர்களா? உடனே மழை நீரை சேமிக்க ஆயத்தமாகுங்கள். உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்லுங்கள்.